[வியாழக்கிழமை, 24 மே 2007]
யாழ். தீவகம் நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் மேற்குப்புறத்தீவுகளின் தொலைவில் உள்ள நெடுந்தீவின் தென்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த வருடம் அமைத்த கடற்படைத்தளத்தின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர்.
கடற்புலிகளின் தாக்குதல் அணிகள் படகுகளில் சென்று இன்று அதிகாலை 12.45 மணிக்கு நெடுந்தீவுப்பகுதியின் தெற்குக்கரையில் தரையிறங்கின.
நெடுந்தீவு தெற்கு வெல்லைப்பகுதியில் தரையிறங்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணிகள், அதிகாலை 1.05 மணிக்கு உயர்பாதுகாப்பு அமைப்புகளுடன் இருந்த கடற்படைத்தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடக்கினர்.
தொடர்ச்சியாக கடற்புலிகள், கடற்படைத் தளத்தின்மீது தீவிரமாக நடத்திய தாக்குதலையடுத்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு தளத்தை முற்றாக தாக்கியழித்தனர். அப்போது அப்பகுதி சிறிலங்கா கடற்படையினர் டோராப் பீரங்கிப்படகுகள், நீருந்து விசைப்படகுகளில் வந்தன.
இவற்றுக்கு எதிராகவும் கடற்புலிகள் தாக்குதலை தொடுத்தனர். அந்த தாக்குதலின் போது டோராப் பீரங்கிப்படகு ஒன்று கரையோர முருகைக்கற்பாறைகளில் மோதி முற்றாக சேதமடைந்தது.
மேலும் இரண்டு பீரங்கிப்படகுகள் சேதமாக்கப்பட்டன. இதனையடுத்து தளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்புலிகள் அங்கிருந்த கடற்படையினரின் ராடார் - 01, 50 கலிபர் துப்பாக்கி - 03, பிகே எல்எம்ஜி துப்பாக்கிகள் - 02, ஆர்பிஜி - 01, ரி-56 2 ரக துப்பாக்கிகள் - 08, ஏகே எல்எம்ஜி - 01, 50 கலிபர் துப்பாக்கிகளுக்கான ரவைகள் உட்பட போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், இராணுவத் தளபாடங்கள் ஆகியவற்றை கைப்பற்றி வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கடற்படைத்தளத்தில் கடற்படையினரின் 34 சடலங்கள் கிடக்க காணப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை கடற்புலிகள் தளத்தில் இருந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினர் பெரும் பாதுகாப்புப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடற்படை தென்பகுதித்தளத்தை கடற்புலிகள் வெற்றிகரமாக தகர்த்து அழித்த தாக்குதலில் கடற்புலிகள் 4 பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.













படங்கள்: தமிழீழ தேசியத் தொலைக்காட்சி






இத்தாக்குதலில் தமது இன்னுயிரைத் தந்த போராளிகளுக்கு வீர வணக்கங்கள்.
ReplyDeleteகடற்படைத்தளத்தின் மீது பயங்கரமான அடி போல் இருக்கிறதே.
ReplyDeleteவாழ்க தமிழீழம். வெற்றி நமதே.
ReplyDeleteதாய் மண்ணைக் காப்பாற்ற தம் உயிரையே அற்பனித்த நான்கு வீரர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்வோம். வீடியோ படத்தையும் பார்த்தேன். மனதை பிழியும் காட்சிகள். விரைவில் அமைதி திரும்பும் என நம்புவோம்.
ReplyDeleteகளம் கண்டு திரும்பிய கடற்ப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteகளச்சாவடைந்த மாவீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அதிகமாகவே இருக்கும். முகாமை முழுமையாக தமது கட்டுபாட்டில் வைத்திருந்ததாகக் கூறும் புலிகள் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றியுருக்க வாய்புள்ளது.
ReplyDeleteஇத் தாக்குதலின் நோக்கமும் மர்மமாகவே உள்ளது.
pulikalukku kidaiththa vetty tamil makkalin vetty
ReplyDelete