Thursday, May 24, 2007

விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல சிறிலங்கா அரசாங்கம் தடைவிதிக்க கூடாது.

[வியாழக்கிழமை, 24 மே 2007] தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு தெற்கிலுள்ள ஊடகவியலாளர்கள் சென்று நிலவரத்தை ஆராய்ந்து செய்திகளை வழங்க வேண்டுமென்று அமெரிக்க ஊடக பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச தகவல் பரிமாற்ற திட்டத்தினால் எற்பாடுசெய்யப்பட்ட இணைய நேரடிசந்திப் பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.சகல ஊடகவியலாளர் அங்கு செல்ல வேண்டும் என்பதில் அரசாங்கம் எதுவித கட்டுப்படுகளையும் விதிக்கமுடியாது ஊடகவியலாளர்களும் அவர்களது ஆசிரியர்களுமே இதனை தீர்மாணிக்க வேண்டும் அரசாங்கம் அல்ல என டெய்லி மிரர் பத்திரிகையாளர்களால் இவ் இணைய நேரடிசந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கலாநிதி ஹெரி ரிக்சியார்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஊடகங்கள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டுப்பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதையும் இராணுவம் விடுதலைப்புலிகளிற்கு இடையே நடைப்பெறும் மோதல்கள் பற்றி மாத்திரமே செய்திகளைவெளிநாட்டு செய்தி சேவையான ஏ.பி மட்டுமே களநிலவரங்களை வெளியிடுகிறது. என சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்க முன்னாள் உறுப்பினரும் யுத்த மற்றும் குற்றவியல் ஆலோசகருமான கலாநிதி ரிகசியார்டி தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.