Wednesday, May 09, 2007

வெளிநாடுகள் தமது தீர்வுகளை இலங்கை மீது திணிக்கமுடியாது அவை அவசியமற்றவை என்கிறார் ஜனாதிபதி.!!

[புதன்கிழமை, 9 மே 2007]


இலங்கைப் பிரச்சினைக்கு வெளிநாடுகள் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது. சர்வதேசத்தினால் திணிக்கப்படும் தீர்வுகள் எமக்கு அவசியமற்றவை. நாட்டை யும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

ஜனாதிபதி தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை மக்கள் இரத்தம் சிந்தியது போதும்; அவர்கள் பலவகைகளாலும் பாதிக்கப்பட்டதும் போதும். இந்தப் பிரச் சினையை முடிவுக்குக்கொண்டுவந்தாக வேண்டும்.
அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே தீர்வு கண்டறியப்பட வேண்டும். வெளி நாடுகள் திணிக்கும் தீர்வு அவசியமற்றது.

அரசியல் நோக்கத்துக்கு அமைய படை யினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடவில்லை. படையினரின் நம்பிக்கையை வலு வூட்டுவதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. ஆகையால் பயங்கரவாதி களின் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிவிடாமல் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொள் கிறேன்.

பயங்கரவாதத்திற்கு உரிய முறையில் தாம் பதில் அளிக்கின்றனர் என மக்கள் மத்தியில் இப்போது நம்பிக்கை உருவாகி உள்ளது.

இதேவேளை எமது கட்சி அரசியல் தீர்வுயோசனை ஒன்றையும் முன்வைத் துள்ளது.
இந்த வகையில் அனைத்து நடவடிக்கை கள் மூலமும் பயங்கரவாதத்தை தோற் கடிக்க சிறந்த அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம்.

நாட்டுக்குள்ளேயே விமர்சனம் செய்யவேண்டும்
நாட்டில் பிரச்சினை குறித்து விமர்சன ரீதியாக நாட்டுக்குள்ளேயே ஆராயப்பட வேண்டும். அவ்வாறின்றி இனத்தை காட் டிக் கொடுக்கும் வகையில் எவரும் விமர்சிக்கவேண்டாம்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக முறையான திட்டத்தின் கீழ் போராடும் இத்தருணத்தில், அரசியல் இலாபம் கருதி நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கவேண்டாம் என்று நான் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பது எனது பொறுப்பும் கடமையும ஆகும்.


பயங்கரவாதம் காரணமாக நாட்டில் உள்ள பெற்றோர்களும் பிள்ளைகளும் நிம் மதியை இழந்துள்ளனர். இரவு வேளையானதும் எல்லோரும் ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்த வண் ணம் உள்ளனர். வீட்டில் உள்ள காற்றாடி வீசும் சத்தத்தைக் கேட்டாலும் அதனையும் விமானம் வருவதாகக் கருதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலை யைப் போக்குவது அவசியம் என்றார் ஜனாதிபதி.

uthayan.com

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.