Thursday, May 10, 2007

விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வரும் ராஜபக்ச குடும்பம்: ஐ.தே.க.!!

[வியாழக்கிழமை, 10 மே 2007] எந்தவொரு உருப்படியான இராணுவ திட்டங்கள் இல்லாமலும், உயர் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறாமலும் மகிந்த அரசாங்கம், போரை நடத்தி வருவதுடன், ராஜபக்ச குடும்பம் விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளை ராஜபக்ச குடும்பம் பலப்படுத்தி வருவதுடன் பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கம், பலவீனப்பட்டும் வருகின்றது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்களை வாக்களிக்க விடாது தடுத்துள்ளனர். இதனால் அனைத்துலகத்தில் இருந்து அவர்கள் தனிமைப்பட்டிருந்தனர். 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் அவர்களை தடை செய்திருந்தது. ஆனால் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குலுக்கு ஆதரவாக அனைத்துலகத்தை ஒன்றுதிரட்ட மகிந்தவால் முடியவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் இராணுவ நெருக்கடிகள் மகிந்த சிந்தனையின் வெறுமையைக்காட்டுகின்றது. வெறும் வார்த்தைகளுக்கு பெருமை சேர்ப்பது, விளக்கேற்றுவது, கடதாசி மட்டைகளில் கதாநாயகர்களை உருவாக்குவது நாட்டை அழிவுப்பாதைக்கே கொண்டு செல்லும். முன்னைய சிறிலங்கா அதன் ஜனநாயகம், மனித உரிமைகளை மதிக்கும் தன்மை ஆகியவற்றால் உலகில் மதிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. ஆனால் தற்போதைய மகிந்த அரசாங்கம் கடத்தல்கள், காணாமல் போதல் ஊடக சுதந்திரங்களை நசுக்குதல், ஜனநாயக சீர்கேடு போன்ற மனித உரிமை மீறல்களில் விடுதலைப் புலிகளுடன் போட்டி போடுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.