Wednesday, May 09, 2007

முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும்? கருத்து கணிப்பை கண்டித்து நாளிதழ் அலுவலகத்திற்குள் குண்டு வீச்சு; 3 ஊழியர்கள் பலி.!!

[புதன்கிழமை, 9 மே 2007]


மதுரை: நாளிதழ் ஒன்றில் வெளியான கருத்து கணிப்பை கண்டித்து தி.மு.க,வினர் மதுரையிலுள்ள அதன் அலுவலகத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 ஊழியர்கள் பலியாகினர். முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும்? என்று கருத்து கணிப்பை அந்த நாளிதழ் வெளியிட்டது.
தமிழக அளவில் ஸ்டாலினுக்கு 70 சதவீதமும், அழகிரிக்கு 2 சதவீதமும், அதில் மதுரை மக்கள் 67 சதவீதம் பேர் ஸ்டாலினுக்கும், 6 சதவீதம் பேர் அழகிரிக்கும் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டித்து மதுரையின் பல்வேறு இடங்களில் தி.மு.க.,வினர் நாளிதழை எரித்து தொடர் மறியல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.

சம்பவத்தின் போது கல்வீச்சில் 8 பஸ்கள் சேதமடைந்தன. இதனால் மதுரை மேலுõர் ரோட்டில் உத்தங்குடியில் உள்ள அந்த நாளிதழ் அலுவலகத்திற்கு ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காலை 11 மணிக்கு மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி தலைமையில் 10 பேர் கொண்ட தி.மு.க.,வினர் சுமோ காரில் அந்த அலுவலகத்திற்குள் புகுந்தது. உள்ளே புகுந்த அவர்கள் செக்யூரிட்டி அறையை தாக்கிவிட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கரவாகனங்களுக்கு தீ வைத்தனர். பின்னர் அலுவலகத்திற்குள் அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் வரவேற்பு அறை முழுவதும் தீக்கிரையாகின. அச்சக அறைக்கு சென்றவர்கள், பேப்பர் ரோல்களுக்கு தீவைத்தனர். ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
அலுவலகத்தின் கடைசி பகுதியில் உள்ள ஜெனரேட்டர் அறைக்கும் தீ வைக்கப்பட்டது.

இதற்கிடையே 5 பேர் இரும்பு ஏணிப்படிகளில் ஏறி மேல்தள அறைகளில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் கீழக்கரையைச் சேர்ந்த கோபி(25), மதுரையை சேர்ந்த வினோத்குமார்(23) ஆகியோர் இருந்த கம்ப்யூட்டர் அறையிலும் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர்.

எட்டு தீயணைப்பு வண்டிகள் மூலம் தீ அணைக்கப்பட்டது. இதன்பிறகும் தீ அணையாததால் தனியார் தண்ணீர் வண்டிகள் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதற்கிடையே கோபி, வினோத்குமாரை காணவில்லை என்று ஊழியர்கள் தேடியபோது புகையால் மூச்சுத்திணறி இருவரும் இறந்திருந்தனர். அங்கு வந்த மதுரை டி.ஐ.ஜி., கலிமுல்லாகான், மாவட்ட எஸ்.பி., அன்பு ஆகியோரை முற்றுகையிட்டனர்.

அந்த ஊழியர்கள் மதுரைமேலுõர் ரோட்டில் மதியம் 12 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். ன்முறையில் ஈடுபட்ட அட்டாக் பாண்டி, சரவணன், கோபி ஆகியோரையும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். மாலை 3.30 மணியளவில் எஸ்.பி., அன்பு, நடவடிக்கை எடுக்கிறேன். கலைந்து செல்லுங்கள் என்று கூறியதை ஊழியர்கள் ஏற்க மறுத்ததால் மதுரைமேலுர் ரோட்டில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மாலை 4 மணியளவில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த முத்துராமலிங்கத்தை காணவில்லை என ஊழியர்கள் தேடினர். மாலை 4.40 மணியளவில் மூச்சு திணறி இறந்த நிலையில் அவரது உடல் அந்த அலுவலகத்திற்குள் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை மேலுõர் ரோட்டில் வைத்து ஊழியர்கள் ரோடு மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்

dinamalar.com

6 comments:

  1. கருணாநிதி கட்சிக்கு தன் வாரிசு யார் என்று அதற்கு முன்பாக சொல்லிவிட்டுப்போனால் நம்ம தப்பித்தோம்.!

    ReplyDelete
  2. எனக்கு ஒரு சந்தேகம். அழகிரியின் ஆதரவாளர்களுக்கு கோபம் வந்தது அழகிரி ஸ்டாலினிக்கு கீழ் வந்ததாலா இல்லை தயாநிதி மாறனுக்கு கீழ் வந்ததாலா?

    ReplyDelete
  3. கருணாநிதிக்கான விழாக் கொண்டாட்டங்களுக்கு முன்பாக இப்படி நடந்திருப்பது இன்னுமொரு பின்னடைவு.

    ReplyDelete
  4. இறுதியில் இதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள்தான் காரணம் என முகர்ஜி சொல்வரா என்ற அச்சத்தில் இருக்கின்றோம்.

    ReplyDelete
  5. இன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    ReplyDelete
  6. தினமலர் போன்ற பத்திரிக்கைகளின் கருத்துத் திணிப்பையே சகித்துக் கொண்டிருக்கிறோம்.கருத்துக் கணிப்புகள் அவ்வளவு மோசமானவை அல்ல.ஜெயாவுக்காக மூன்று மாணவிகளின் உயிரை எடுத்த குற்றவாளிகளை தூக்கில் ஏற்றியிருந்தால் இப்போது அழகிரியின் ஆட்கள் இந்த கோரத் தாண்டவம் ஆடியிருக்க மாட்டார்கள்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.