[ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007] தமிழ்நாட்டின் சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட வர்த்தக வானூர்தி மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அனைத்துலக வான் போக்குவரத்துச் சபையிடம் முறையிடப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசிய நாட்டின் முன்னணி வானூர்தி நிறுவனத்தின் வானூர்தி ஒன்று இந்தியாவின் சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆசிய நாடு ஒன்றின் தலைநகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தரையில் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. இந்த வானூர்தியின் வானோடி தனது வானூர்தி தாக்குதலுக்கு உள்ளாகியதாக அனைத்துலக வான் போக்குவரத்துச் சபையிடம் முறையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஏப்பிரல் 26 ஆம் நாள் இரவு நடைபெற்றது. இதே நாளில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தாக்குதலை நடத்த முயற்சித்திருந்தன. இந்த நேரத்தில் வவுனியா வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த வர்த்தக வானூர்தி ஒன்று இராணுவத்தினரின் துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது. எனினும் வானூர்தி அதிக தொலைவில் பறந்ததனால் தப்பிக் கொண்டது. இந்த தாக்குதல் தொடர்பாக அனைத்துலக வான் போக்குவரத்துச் சபை முழு அளவிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே கொழும்புக்கு பயணிக்கும் வானூர்திகளின் வானூர்தி நிறுவனங்கள் சபைப் பிரதிநிதிகள் சிறிலங்காவின் பொதுவானூர்தித்துறை, துறைமுகங்கள் அமைச்சின் செயலாளரான திலக் கொலுரயை கடந்த வியாழக்கிழமை சந்தித்தனர். கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையம் மே 10 ஆம் நாளில் இருந்து இரவில் மூடப்படுவது தொடர்பாக தமக்கு உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர்கள் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர். மேலும் ஏனையோரை போலவே தாமும் ஊடகங்களின் ஊடாகவே இந்த தகவலை அறிந்து கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க வான்பரப்பின் பாதுகாப்பு நிலை குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் தலைவரான சந்திமா பி. ராசபுத்ராவே வானூர்தி நிலையத்தை ஐந்தரை மணிநேரங்களுக்கு மூடும் முடிவை எடுத்தவர். இவர் ஒரு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிபுணர் ஆவார். பல காலம் அமெரிக்காவில் வாழ்ந்த இவர் மகிந்த அரச தலைவராக பதவியேற்ற பின்னர் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, May 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.