Sunday, May 20, 2007

வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு.

[ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007] வவுனியா பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் படையினர் ஓமந்தை வழியாக பாலமோட்டை, நவ்வி பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவல் நகர்வை மேற்கொண்டனர். உடுருவிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர். ஊடுருவி தாக்குதல் நடத்திய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக நடத்தி நேற்று மதியத்துடன் படையினருக்கு கடும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இழப்புக்களை ஏற்படுத்தி ஓமந்தை மேற்கு முன்தளத்துக்கு படையினரை விடுதலைப் புலிகள் விரட்டியடித்தனர். இம் மோதலில் படையினர் தரப்பில் 30 தொடக்கம் 40 பேர் வரையானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மற்றும் கொழும்பு மருத்துவமனைகளின் ஊடாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் மருத்துவமனைக்கு படையினரது சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த படையினர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொல்லப்பட்ட படையினரில் கப்டன் நிருசா உட்பட 4 அதிகாரிகளும் 30 படையினரும் அடங்குவர் என்று கொழும்பு படைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம் முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் லெப். கேணல் அப்பன் அல்லது குயிலன் உட்பட7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.