இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் பொருட்டு பிரித்தானிய அரசினால் மேலதிகமாக ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் வழங்கப்பட உள்ளதாக சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மோதல்களால் பல பத்தாயிரம் அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் கிழக்கு மாகாணம் முக்கியமானது.
பிரித்தானியாவினால் மேலதிகமாக வழங்கப்படும் இந்த தொகை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
இதன் மூலம் தமது வாழ்க்கைக்கான தேவைகளையும், வீடுகளையும் இழந்து வாழும் மக்களுக்கு மேலதிக உதவிகள் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.