Friday, May 25, 2007

வடக்கில் மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் தயார்.!

[வெள்ளிக்கிழமை, 25 மே 2007]

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு நோக்கிய மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகி வருவதுடன் சிறிலங்கா இராணுவத்தினரின் பலமான நிலைகளை அழித்தொழிப்பதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விடுதலைப்புலிகள் தற்போது தமது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளதாகவும், தளபதிகள் முறையே கேணல் பானு, கேணல் நகுலன் ஆகியோர் தரை, கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும், தேசியத்தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வான் சார் நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானவராக இருப்பார் எனவும் அக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார், நாச்சிக்குடா பகுதியில் கடற்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், யாழ்ப்பாண வான்பரப்பினுள் வான்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவிக்கும் கட்டுரையாளர் சமீபத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ள " புலிகளின் இராணுவ மேலாண்மை உறுதிசெய்யப்படும் போதே சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைக்கு வரும்" என்ற கருத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.