Thursday, May 24, 2007

கொழும்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் பேரூந்து மீது குண்டுத்தாக்குதல்: 7 பேர் படுகாயம்.!!

[வியாழக்கிழமை, 24 மே 2007]

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத்தினரின் பேரூந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் முதலாம் குறுக்குத் தெருவில் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பேரூந்து மீது இன்று வியாழக்கிழமை காலை 8.55 மணியளவில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்ட உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் அல்ல என்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இராணுவத்தினர் தரப்பில் நால்வரும், பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரின் நிலைமை மிகவும் ஆபத்தாகவும் இருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. ஆகா நாடு இப்பதான் நல்லா அல்லோலகல்லோப்படுகுது ஆனாலும் இது காணாது???? தமிழிழத்தில நடக்கிறதோட ஓப்பிடும் பொழுது சிறியது தான் ஆனாலும் பரவாயில்லை.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.