Friday, May 18, 2007

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை மூட படையினர் முயற்சி.!!!

[வெள்ளிக்கிழமை, 18 மே 2007]


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான முன்முயற்சி நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளார்கள் இதனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி சந்திரஸ்ரீக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் பல் கலைக்கழக பதில் துனைவேந்தர் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அறியவருகின்றது
பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் படையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் ஈ.பி.டி.பி மற்றும் ஆயுத ஒட்டுக்குழுக்கழும் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை குழப்பும் நடவடிக்கையை காலத்திற்குக் காலம் மேற்கொண்டு வருவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தமது கல்வியைக் குழப்பி அத்துமிறி பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதும் மற்றும் துண்டுப் பிரசுரங்களை ஒட்டியும் வெளியிட்டும் மாணவர்களை கைது செய்தும் கடத்தியும் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை குழப்பி மாணவர்களை ஆத்திரப்படுத்தி பல் கலைக்கழகத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டை படைத்தரப்பினரே மேற்கொண்டுள்ளார்கள் எனவும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை தெரிவிக்கின்றார்கள்.

இத்தகைய ஒரு சூழ் நிலையை ஏற்படுத்தி பல் கலைக்கழகத்தை மூடி பல் கலைக்கழகத்திற்கான பாதுகாப்பு என்ற போர்வையில் ஒரு இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு இராணுவத்தினர் முன் முயற்சி நடவடிக்கையை எடுக்கவுள்ளார்கள் எனவும் தெரியவருகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.