Tuesday, May 22, 2007

மாங்குளம் வான் தாக்குதல் புலிகளின் பயிற்முகாம்களிற்கு எதுவித சேதமும் இல்லை - இராசையா இளந்திரயன்.!!

[செவ்வாய்க்கிழமை, 22 மே 2007]


சிறீலங்கா வான் படைக்கு சொந்தமான இரண்டு குண்டு வீச்சு விமானங்கள் வன்னியில் இன்று காலை மூன்று தடவைகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றன.

மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என, தமிழீழ இராணுவப் பேச்சாளர் கூறியதாக ஏ.பி செய்தி வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா வான் படையினர் வீசிய குண்டுகள் அருகிலுள்ள காட்டுப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்திருப்பதாகவும், இதனால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என இளந்திரையன் கூறிய போதிலும், மாங்குளத்திலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக, சிறீலங்கா வான் படைப் பேச்சாளர் கப்டன் அஜந்த சில்வா அறிவித்துள்ளார்.

முன்னதாக, அதிகாலை 5.30 அளவில் வன்னி வான் பரப்பில் தாழப்பறந்த ஆளில்லாத வேவு விமானம் உளவு பார்த்துச் சென்றிருந்தது.

இதேவேளை, சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் வான், மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக சிறுவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.