Wednesday, May 09, 2007

யாழ் சென்ற ரிச்சாட் பெளச்சர் பலதரப்பினருடன் சந்திப்பு.!!

[புதன்கிழமை, 9 மே 2007]

அமெரிக்காவின் இராஜங்க துணைச் செயலர் ரிட்சாட் பெளச்சர் இன்று யாழ் குடாநாட்டுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று காலை பலாலி கூட்டுப்படைத் தளத்திற்கு விமான மூலம் சென்ற ரிச்சாட் பெளச்சர் அங்கு படை உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.




இதனைத் தொடர்ந்து பலாலியிலிருந்து உலங்கு வானூர்த்தி மூலம் யாழ் நகரம் சென்ற ரிட்சாட் பெளச்சர் அங்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் அவர்களைச் சந்தித்து யாழ் குடாநாட்டு நிலமைகளை அறிந்துகொண்டார்.


சந்திப்பின் போது யாழ் குடாநாட்டின் நிலமைகள் குறித்த அறிக்கை ஒன்றையும் கே.கணேஸ் அவர்கள் ரிச்சாட் பெளச்சரிடம் கையளித்துள்ளார். இதில் குறிப்பாக கல்வி மற்றும் தொழில் சார்ந்த நிலமைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ் நூலகத்தைச் சென்று பார்வையிட்டுள்ளார். பல்கலைக்கழக துணை துணைவேந்தர் குமாரவடிவேலு அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து உதயன் நாளிதழ் பணிமனையையும் பார்வையிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்துது யாழ் மறைமாவட்ட தோமஸ் சவுந்திரநாயம் அடிகளாரையும் சந்திந்து கலந்துரையாடியுள்ளார்.

ரிச்சாட் பெளச்சருடன் சிறீங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும் ரொபேட் ஒப்லேக்கும் யாழ் சென்றிருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.