[வெள்ளிக்கிழமை, 18 மே 2007] தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பாக தமிழகக் காவல்துறை, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இதனை முற்றாக நிராகரித்திருந்தது. இந்நிலையில் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
Friday, May 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)






புலிகள் மீது பழிபோடுவதற்காக தொடங்கப்பட்ட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ReplyDelete