
அதிகாரப் பகிர்வு விவகாரம் எந்த யோசனை புலிகளுக்குச் சமர்ப்பித்தாலும் ஜே. வி. பி. மிகக் கடுமையாக எதிர்த்தே தீரும்!
[Saturday February 03 2007 ]
அதிகாரப் பகிர்வு யோசனை எதனையும், எந்த வடிவத்திலேனும் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசனை செய்யுமாயின், அதனை எதிர்ப்பதற் கான சகல விதமான நடவடிக்கைகளிலும் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கும் எல்லாக் கட்டங்களிலும் அதனை எதிர்த்தே தீரும். இவ்வாறு ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் இம்மாத மத்தியில் கூடவுள்ளது. அது குறித் துக் கருத்து வெளியிட்டபோதே ஜே.வி.பியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இம்மாத மத்தியில் மீண்டும் கூடும் என்று அதன் தலைவரான விஞ்ஞான தொழில் நுட்பத்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறினார். இம்முறை அதிகாரப் பகிர்வு குறித்து விரிவாக ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் விதாரண சமர்ப்பித்த யோசனை ஏனைய கட்சிகள் சமர்ப்பித்த யோசனைகள் என்பன மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தனது யோசனையை ஏற்கனவே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குச் சமர்ப்பித்து விட்டது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் சமர்ப்பித்த யோசனைகள் கொண்ட அறிக்கையைப் பரிசீலனை செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு குழுவை நிய மித்திருந்தது. அந்தக் குழுவின் கருத்துக்கள் அடங்கிய சிபார்சுகளும் இம்மாத மத்தியில் மீண்டும் ஆரம்பமாகும் கூட்டத் தொடரில் ஆராயப்படும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இருந்து ஜே.வி.பி. விலகியது தெரிந்ததே.
Saturday, February 03, 2007
அதிகாரப் பகிர்வு விவகாரம் எந்த யோசனை புலிகளுக்குச் சமர்ப்பித்தாலும் ஜே. வி. பி. மிகக்....
Saturday, February 03, 2007





