[Saturday February 10 2007 ] [uthayan.com]
யுத்த நிறுத்தத்துக்கு வழிசெய்த புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் வரையறை செய்யப் பட்ட தமது கட்டுப்பாட்டு எல்லைகளுக்கு அரசுப்படைகள் மீண்டால் மட்டுமே இனிமேல் அமைதிப் பேச்சுகளை நடத்தமுடியும் என்று விடுதலைப் புலிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர் என்று நம்பகமாக அறியவந்திருக்கின்றது.
கடந்த முதலாம் திகதி கிளிநொச்சியில் அனுசரணைத் தரப்பினரான நோர்வேயின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழு இவ்விடயத் தைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்தது என்று அறியவந்தது.
கொழும்புக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் தலைமையிலான நோர்வே அனுசரணைக் குழு இம்மாத முற் பகுதியில் கிளிநொச்சிக்குச் சென்று விடு தலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தலைமை யிலான புலிகளின் குழுவினரைச் சந்தித்துப் பேசியது என்று தெரிந்ததே.
இப்போதே அமைதிப் பேச்சுகளை மீள ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.
அச்சமயம், யுத்த நிறுத்த உடன் பாட் டுக்கு அமைய தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் எல்லைகளுக்கு அரசுப்படை கள் திரும்பினால் மட்டுமே பேச்சு நடை பெறுவதற்கான சூழல் ஏற்படும். இல்லை யேல் அமைதிப் பேச்சுக்கு இடமேயில்லை என்பதைப் புலிகளின் பிரதிநிதிகள், நோர்வே அனுசரணைத் தரப்பினருக்கு தெளிவாக வும் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தனர் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
எனினும், படையினர் எந்தெந்தப் பிர தேசங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியான எல்லைப்புறங்களைத் தாண்டி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்
குள் ஊடுருவி ஆக்கிரமிப்புச் செய்துள் ளார்கள் என்ற விவரங்களையோ அல்லது எந்தெந்தப் பகுதிகளிலிருந்து அரசுத் துருப் புகள் விலகவேண்டும் என்பதையோ புலி கள் நோர்வே அனுசரணைத் தரப்பினருக் குக் குறிப்பாகச் சுட்டிக்காட்டவில்லை என்றும் தெரிகின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மோசமாக மீறப்பட்டிருக்கின்றது. எல்லைப் பிரதேசங் களை மீறி பெரும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை அரசுப்படைகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன. இராணுவ முனைப்பிலேயே அரசு தீவிர மாக உள்ளது. ஏ9 பாதை மக்கள் போக்கு வரத்துக்கு திறந்திருக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் எழுத்துக்கு எழுத்து விவர மாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி அரசு பாதையை மூடி தமிழ் மக்களை முற்றுகைச் சிறைக்குள் அடக்கி வைத்திருக்கின்றது. தமிழர் தாயகம் எங்கும் அரச பயங்கரவாதம் எல்லை மீறி கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கின்றது. இவை எல்லாம் மாற்றியமைக்கப்படாமல் பேச் சென்ற பேச்சுக்கே இடமில்லை. எனப் புலிகள் மிகத் தெளிவாக உறுதியாக நோர்வேத் தரப்பினருக்கு எடுத்துரைத் திருக்கின்றனர்.
புலிகளின் நிலைப்பாட்டை அறிந்ததை அடுத்து, அமைதி முயற்சிகளை மீள ஆரம் பிப்பதற்கான வாய்ப்பு அருகிவிட்டது என்ற அதிருப்தியோடு நோர்வேக் குழு கிளிநொச்சியிலிருந்து கொழும்பு மீண்டி ருப்பதாகவும் அறியவந்தது.
Saturday, February 10, 2007
யுத்தநிறுத்த உடன்பாட்டு நிலைகளுக்கு அரசுப் படைகள் மீண்டாலேயே பேச்சு நோர்வேத் தரப்புக்கு புலிகள் தெளிவுபடுத்திய பதில் இதுவே
Saturday, February 10, 2007





