சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச இந்தியாவிற்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள கோட்பாய ராஜபக்சவை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி சந்தித்து பேசியுள்ளார்
இந்த சந்திப்பின் போது சிறீலங்கா அரச படைகள் மேற்கொண்டு வரம் வலிந்த தாக்குதல்கள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் தமது கடுமையான விசனத்தை வெளிப்படுத்தியதாகவும் இவ்வாறான தாக்குதல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தம் என எச்சரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது
கோட்டபாய ராஜபக்சவுடன் சிறீலங்கா விமானப்படை தளபதி ரோசான் குணதிலகவும் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் இருவரும் இந்தியாவில் நடைபெறும் ஏய்ரோ இந்திய கண்காடசியில் கலந்து கொள்ளவே இந்தியா சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அத உண்மைக்கு புறம்பானது என்று தகவல்கள் வெளியாகியுள்ன
சிறீலங்கா அரச படைகள் விடுதலைப் லிகளின் தளங்களை வடக்கிலும் கிழக்கிலும் கைப்பற்றும் பாரிய படை நடவடிக்கை ஒனனை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்தே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை இந்தியா அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை விடுதலைப் புலிகளின் பதில் நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதை அனுப ரீதியில் உணர்ந்திராத பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபகசவும் விரைவில் அதன் பலனை அனுபவிப்பாளர்க என மேற்குலக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.






