[வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2007]
வவுனியா மகாரம்பைக்குளப் பகுதியில் வியாழக்கிழமை காலை கணவன் மனைவி ஆகிய இருவரும் மற்றும் கூமன்குளப்பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் ஓட்டோ சாரதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் 47 அகவையுடைய ஆறுமுகம் சக்திவேல், 42 அகவையுடைய மகேஸ்வரி சக்திவேல் ஆகியோர் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நித்திரையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்டகள். இவர்களுக்கு இருபிள்ளை உள்ளதாக வவுனியா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை கொல்லப்பட்ட மூச்சக்கர வண்டிசாரதி 33 அகவையுடைய இரு பிள்ளைகளின் தந்தையான ராமசந்திரன் nஐயச்சந்திரன் என இனம்காணப்பட்டுள்ளார். இவர் யுத்த நடவடிக்கையின் காரணமாக ஒருகாலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மூவரது உடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளது.
Thursday, February 08, 2007
வவுனியாவில் மூவர் சுட்டுக் கொல்லப்ட்டுள்ளார்கள்.!!
Thursday, February 08, 2007





