[வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2007]
கடந்தவாரம் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவை வாகரையில் வரவேற்று ஆசிவழங்கிய இந்து மதகுரு ஒருவர் நேற்று இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் செல்லையா பரமேஸ்வரக்குருக்களை (60) வீட்டுக்கு வெளியே அழைத்த இரு இனந்தெரியாத நபர்கள் அவருடன் 10 நிமிடங்கள் உரையாடியபின்னர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் ரீ-56 ரக துப்பாக்கிச் சன்னங்கள் 7 காணப்படுவதாகவும், ஏறாவூர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.