சிறீலங்கா இராணுவத்தின் உந்துருளிப்பிரிவினரால்; கடந்த புதன்கிழமை மிருசுவில் தென்மராச்சிப்பகுதியில் மாலை 4 மணியளவில் இளம் விவசாயி ஒருவரை சுட்டுக் காயப்படுத்தியுள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில் வேலணை நான்காம் வட்டாரத்தில் மாலை 3 மணியளவில் சிறீலங்கா கடற்படையினரால் உழவுஇயந்திரத்தில் பயணம்செய்த ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
மிருசுவில் பகுதியில் சூட்டுசம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் 24 அகவையுடைய கருணாநிதி முகுந்தன் எனவும் மற்றவர் 47 அகவையுடைய கைலாயப்பிள்ளை பாலச்சந்திரன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார். இவர் சிறீலங்கா கடற்படையினர் பயணம் செய்யும் போது வழிவிடுவதற்கு சற்று பிந்திய காரணத்திற்காக எச்சரிக்கை செய்யுமுகமாக இவரமீது துப்பாக்கிசூடு செய்யப்பட்டுள்ளது.






