Wednesday, February 14, 2007

தென்னிலங்கை அரசியல் வியூகத்தில் த.தே.கூ ஒருபோதும் சிக்காது - சுரேஸ் பிரேமச்சந்திரன்.

புதன் 14-02-2007


தென்னிலங்கையின் அரசியல் வியூகங்களுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் சிக்கிக் கொள்ளாது என அந்த கட்சி அறிவித்துள்ளது

தென்னிலங்கை அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைமைகளினதும் சுய லாப அரசியலுக்கு தமது கட்சி ஒருபோதும் துணை போகாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மூன்று பேரின் அமைச்சு பதவிகளை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பறித்தமையை அடுத்து தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி நிலையை பயன்படுத்தி சிங்கள கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்ச்சிக்கின்றன.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அந்த கட்சிகள் எதிர்பார்பது முட்டாள் தனமானது என்றுதம் அவர் கூறியுள்ளார்

நாட்டில் தோன்றியுள்ள அனைத்து நெருக்கடிகளாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தமிழ் மக்களே என்றும் இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் நல்ன சாராத எந்த ஒரு அரசியல் வேலைத்திட்டத்தையும் தமது கட்சி முன்னெடுக்காது என்றும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகாது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்

தனது கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கம் உள்வாங்கியதால் பாதிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் அமைச்சு பதவிகளை இழந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து இப்போது பேசுகின்றனர்

ஆனால் அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து அவர்கள் எந்தவிதமான எதிர்ப்பினையும் வெளிப்படுத்த வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்