[புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007]
வவுனியா மாவட்டத்தின் மாமடுப் பகுதிக்கு சிறிலங்காப் படையினரால் பெருமளவில் படைக்கலங்கள் நகர்த்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாகவே சிறிலங்காப் படையினர், வவுனியாவில் போர்முனை ஒன்றை திறக்க உள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.
தற்போது ஏ-9 வீதிக்கு கிழக்காக உள்ள சிங்களக் குடியேற்றப் பகுதியான மாமடுப் பகுதியில் கடந்த சில நாட்களாக படையினர் படைக்கலங்களை நகர்த்திக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அப்பகுதியில் புல்டோசர்கள் அதிகளவில் நகர்த்தப்பட்டும், ஆட்டிலெறி நிலைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன. அத்துடன் பெருமளவில் மண் மூட்டை கட்டுவதற்கான பைகள், இராணுவ வேலிக்கான முட்கம்பிச்சுருள்கள் என்பனவும் மாமடுவுக்கு நகர்த்தப்படுகின்றன.
இவற்றிற்கும் மேலாக படையினரின் கனரக போர் ஊர்திகளின் நடமாட்டமும் அப்பகுதிகளில் அதிகரித்துள்ளன. இந்த போர்க்கல நகர்த்தல்களையடுத்து புளியங்குளம் வரையான பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Wednesday, February 14, 2007
சிறிலங்காப் படையினரின் புதிய போர்முனையாகும் வவுனியா.
Wednesday, February 14, 2007





