Sunday, February 11, 2007

யாழ். நிலைமையைக் கண்டறிவதற்கு ஐ.நா. உயர்குழு நேற்றுத் திடீர் விஜயம்.!

[Sunday February 11 2007 ] [uthayan.com]

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதைய நிலையைமக்களின் அவலங்களை கண்டறியும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டக் குழு ஒன்று, நேற்று திடீர் விஜயம் செய்தது.

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூன் விடுத்த பணிப்பின் பேரில், தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உதவிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கான் தலைமையிலான ஐவர் குழு நேற்று இங்கு வந்தது.

குடாநாட்டில் இயங்கும் ஐ.நாவின் உப நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து குடாநாட்டின் நிலைமைகள் குறித்து குழுவினர் விரிவாகக் கேட்டறிந்தனர்.
நேற்றைய ராஜீக விஜயத்தில் ஐ.நாவின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி பிறட்ரிக் லயன், ஐ.நா.தலைமையக அதிகாரிகள் அலன் அரோடி, வலன்ரைன் ஹாற்சின்ஸி, ஐ.நா இலங்கை அலு வலகத்தைச் சேர்ந்த றொறி மொங்கோவா ஆகியோரும் யாழ்ப் பாணம் வந்திருந்தனர்.
அவர்களுடன் இலங்கை வெளிவிவ கார அமைச்சைச் சேர்ந்த எஸ்.பி.டபிள்யு பத்திரான, சமாதான செயலகத்தைச் சேர்ந்த ஷிராணி குணதிலகா ஆகியோரும் கூட வந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட் டக் குழுவினர், குடாநாட்டின் உணவு நிலைமை, மனித உரிமை மீறல்கள், மக் களின் சுதந்திரமான நடமாட்டம் மட்டுப் படுத்தப்பட்டுள்ளமை மற்றும் அவர்களின் அவலங்கள், வாழ்க்கை நிலைப் பாதிப்பு கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கொண்டனர்.

குடாநாட்டு மக்களுக்கு சகல துறை களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக் களை யும் இடர்களையும் மிக விரிவாகக் கேட் டறிவதில் ஐ.நா. தூதுக்குழுவினர் மிகுந்த அக்கறை காட்டியதாக அறியவந் தது.

தாம் சந்தித்த தரப்பினரிடம் இருந்து விரிவான அறிக்கைகளையும் புள்ளிவிவ ரங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்ட தாகவும் தெரிகிறது.

ஐ.நாவின் உயர்மட்டக்குழுவினர் யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்துரையாடினர்.

ஐவர் கொண்ட ஐ.நா. உயர் மட்டத் தூதுக் குழுவினர் நேற்றுக் காலை இங்கு வந்து மாலையில் கொழும்பு திரும்பினர்.

நாவாந்துறையில் உள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்ற தூதுக்குழுவினர் அங்குள்ள மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தனர்.