[திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2007]
சிறீலங்கா விமானப்படைக்கு சொந்தமான ஆறு கிபீர் ரக குண்டுவீச்சு விமானங்கள் இன்று காலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வன்னிப்பகுதி மீது கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
முல்லைத்தீவில் உள்ள விசுவமடுவில் காலை 9.00 மணிமுதல் 9.30 வரை நடைபெற்ற இந்த தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் 18 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக சிறீலங்காவின் வான்படையினர் வன்னிப் பகுதிகள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம் வன்னிக்கான ஒமந்தை போக்குவரத்துப் பாதை நேற்றுடன் மூடப்பட்டுள்ளது. சில வாகனங்களே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Monday, February 12, 2007
வன்னிப்பகுதி மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சு.
Monday, February 12, 2007





