[செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2007]
யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் அடையாளம் தெரியாதோரால் 18 வயது இளைஞர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொடிகாமம் சிறிலங்கா காவல் நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் இந்த இளைஞரை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
கச்சாய் வீதியில் ஈருளியில் சென்று கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட இவர், காசிப்பிள்ளை வசந்தகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் கொடிகாமம் சிறிலங்கா காவல்நிலையம் உள்ளது.
சாவகச்சேரியில் நேற்று இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tuesday, February 13, 2007
கொடிகாமத்தில் 18 வயது இளைஞர் சுட்டுக்கொலை.
Tuesday, February 13, 2007





