Monday, February 12, 2007

போர்நிறுத்தத்தை இரத்துச் செய்யும்வரை பௌத்த துறவிகள் உண்ணாநோன்பு.!

[திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2007]

விடுதலைப்புலிகளுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இரத்துச் செய்யும் வரை உண்ணாநோன்பை கடைப்பிடிக்கப்போவதாக சிறீலங்காவின் தேசிய பௌத்த துறவிகள் முன்னணி அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்த உண்ண நோன்பு போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும் வரை தொடரும் என இந்த முன்னணியின் தலைவரான வண. தம்பல அமில தேரர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி உட்பட தென்னிலங்கையில் உள்ள பல சிங்களக் கட்சிகள் போர்நிறுத்தத்தை இரத்துச் செய்யும் படியும், எதிர்வரும் 22 ஆம் நாளுடன் போர்நிறுத்தமானது 5 ஆம் ஆண்டை நிறைவு செய்வதை தடுக்கும் படியும் கோரிக்கைகள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

போர்நிறுத்தம் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்தால் விடுதலைப்புலிகள் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுவிடுவார்கள் என இந்த கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

புதினம்.கொம்.