
[வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2007]
சிறிலங்கா படையினரின் அடாவடிகள் கல்வி சமூகத்தின் மீது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி இது குறித்து கண்டனறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
சிறிலங்கா படையினர் பொதுமக்களை குறிவைத்து கடுமையான தாக்குதல்களையும் குடியிருப்பு மீது கண்முடித்தனமான எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகின்ற நிலையில் கல்வி சமூகத்தின் மீது அதன் கெடுபிடிகளை கட்டவிழுத்துள்ளது.
யாழ் குடாநாட்டு மாணவர்களின் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்திய சிறிலங்கா படையினர் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதன் பயங்கரவாத்தினை விரிவுபடுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் எதிர் காலத்தில் பாரதூமான விளைவுகளை ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.
சிறிலங்கா படையினர் திட்டமிட்டு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் கல்வி சார் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இது போன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் கிழக்கில் ஏற்படாது இருக்க வேண்டும். என்பதே எமது நிலைப்பாடாகும்.
இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் கல்வி சார் ஊழியர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு கல்வி சமூகத்தின் மீது சிறிலங்கா படையினர் அடாவடிகளை அதிகரிக்கும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி மற்றும் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் முற்று முழுதாக ஸ்தம்பிக்க வேண்டிய நிலைப்பாடு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Friday, February 02, 2007
படையினரின் அடாவடிகள் கல்வி சமூகத்தின் மீது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது
Friday, February 02, 2007





