[வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2007]
சிறீலங்காவில் வாழ்க்கைச் செலவு இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 20.5 விகிதமாக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 வருடங்கங்களின் பின்னர் சிறீலங்காவில் ஏற்பட்ட அதிக உயர்வு இதுவாகும் என கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக வர்த்தக மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனா தகவல் தருகையில்:
இந்த நிலைமைகளை நாம் சீர்செய்ய வேண்டும், அரசின் நிதிக் கொள்கைகள் இதற்கு காரணமாகலாம். யாரும் இந்த நிலைமைகளை ஒரு கிழமையிலோ அல்லது ஒரு மாதத்திலோ சீர்செய்ய முடியாது. எனவே எமக்கு இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும்.
ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் எனது அமைச்சின் பொறுப்புக்களையும், கட்டமைப்புக்களையும் தற்போது தான் அறிந்து வருகிறேன். அடுத்த வாரம் எனக்கு எனது அமைச்சின் அதிகாரங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக போதிய தகவல்கள் கிடைத்துவிடும். அதன் பின்னர் வியாபாரம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை கிராம மட்டத்திற்கு மேம்படுத்திவிடுவேன் அதன் மூலம் கூட்டுறவு அமைப்புக்களை பலப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் வாழ்க்கைச் செலவு 21.5 விகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.