Thursday, February 01, 2007

சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் ஜேர்மன் வருகையை எதிர்த்து தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம்.

[Thursday February 01 2007 ]

இன்று ஜேர்மனிக்கு வருகைதரும் சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் வருகையை எதிர்த்து பேர்லின் நகரில் உள்ள ஜேர்மனிய வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக தமிழ் மக்களினால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது


இன்று மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரை நடைபெற்ற இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றிய தமிழ்மக்கள் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைகளின் படங்களை கைகளில் தாங்கியவாறு சிறிலங்கா அரசிற்கு எதிராகவும் சிறிலங்கா அரசிற்கு ஜேர்மனிய அரசு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பினர்.

இவ் எதிர்ப்பு போராட்டத்தின் முடிவில் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சிடம் ஜேர்மன் வாழ் தமிழ் மக்களால் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் படுகொலைகள் பொருளாதாரத்தடைகள் போன்ற விபரங்களுடன் சிறிலங்கா அரசிற்கு ஜேர்மனிய அரசு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என கோரியும் மகஐர் ஒன்று கையளிக்கப்பட்டது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.