Friday, February 02, 2007

மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.!!!

[Friday February 02 2007 ]

நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் ஆணை வழங்கினர். அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் மஹிந்த சிந்தனைக்கு விரோதமாகவும் செயற்பட்டால் அதற்கெதிராக ஜே.வி.பி. போராடும் என்று அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.


மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்றுஅரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இணைந்தால் ஜே.வி.பி. நியாயமான எதிர்க்கட்சியாக செயற்படும் என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.