Monday, February 05, 2007

யாழ்பாணத்தில் பாணுக்கு தட்டுப்பாடு.

திங்கள் 05-02-2007 யாழ்பாணத்தில் வெதுப்பக உரிமையாளர்கள் கோதுமைமா தட்டுப்பாட்டால் வெதுப்பகங்களில் பாண் தயாரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்செயலகத்தில் கோதுமைமாவின் கையிருப்பு அபாயகட்டத்தை எட்டியிருப்பதாகவும் கப்பல் மூலமாக கோதுமை மா யாழ்பாணம் கொண்டு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பதால் இந்நிலை தோன்றியிருப்பதாகவும் யாழ்செயலகம் தெரிவித்துள்ளது. சிற்றி ஒவ் லிவப்பூல் கப்பலில் திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு கோதுமைமா கொண்டுவரப்பட்டபோது அக்கப்பல் பருத்தித்துறைகடலில் தாக்குதலுக்கு உள்ளாகியதால் காங்கேசன் துறைமுகத்தில் பொருட்கள்யாவும் இறக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது. எனினும் யாழ்அதிபர் கோதுமைமா கையிருப்பு குறைந்த நிலையில் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளபோதும் பாண் தட்டுப்பாடு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளார். இதனால் யாழ்பாணத்தில் பாண் தயாரிப்பானது 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தற்போது யாழ்செயலகம் வெதுப்பக உரிமையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கோதுமைமா விநியோகங்கள் மேற்கொள்வதாகவும் வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை வெதுப்பக உரிமையாளர்களின் பன், விசுக்கோத்து ஆகியவற்றை தயாரிப்பதற்கான அனுமதியை யாழ்அதிபர் ரத்துசெய்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.