[செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2007] சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தெகிவளை-கல்கிசைக்கான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் கொழும்பு புறநகரான தெகிவளையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. கொல்லப்பட்டவர் ஆரியரட்ன சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.





