[செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2007]
"இந்தியா டுடே" பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளிலும் கவனிக்கத்தக்க அளவில் செயற்படுகின்ற இளைஞர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
சினிமா, இலக்கியம், குறும்படம், பத்திரிகைத்துறை, தொழில், விளையாட்டு, அரசியல், சமூக சேவை, என்று பதினைந்து பேர் இப்படி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி அவர்களின் பத்திரிகையில் அதை வெளியிடுவார்கள்.
அந்த வகையில் இம்முறை இளம் பத்திரிகையாளருக்கான விருது ஆனந்த விகடனில் பணியாற்றும் டி.அருள்எழிலனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
பத்திரிகைகளில் தோற்றுப்போன, காணாமல் போன எளிய மனிதர்களை அறிமுகப்படுத்தியதற்காகவும், குறும்பட ஆவணப்பட ஈடுபாட்டிற்காகவும் இவரை தெரிவு செய்தாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
'தோற்றுப் போனவர்கள், காணாமல் போனவர்களின் கதைகளை சுவராஸ்யமாக சொல்வதே இவரது இதழியல் அறம்' என்றும் "இந்தியா டுடே" புகழ்ந்துரைத்துள்ளது.
இதுபற்றி எம்மிடம் பேசிய அருள் எழிலன் "இந்த தேர்வு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது... வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பத்திரிகைத்துறையில் நான் இனி செய்ய விரும்புவது ஈழத்தின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சந்திக்க வேண்டும் என்பதும். ஈழம் பற்றி மிக விரிவான ஒரு தொடர் எழுத வேண்டும் என்பதுதான் பத்திரிகைத்துறையில் என்னுடைய ஆசை" என்றும் தெரிவித்தார்.
Tuesday, February 13, 2007
இளம் பத்திரிகையாளர் அருள்எழிலனுக்கு விருது.
Tuesday, February 13, 2007





