Wednesday, February 07, 2007

இந்தியத் தலைவர்களிடமிருந்து சந்திரிகாவுக்கு அவசர அழைப்பு.!!!

[புதன்கிழமை, 7 பெப்ரவரி 2007]

இந்தியத் தலைவர்களின் அழைப்பையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி செல்லவுள்ளார்.

இவ்வார பிற்பகுதியில் லண்டனிலிருந்து நாடு திரும்பவிருந்த நிலையிலேயே புதுடில்லி வருமாறு சந்திரிகாவுக்கு இந்தியத் தலைவர்களிடமிருந்து அவசர அழைப்பொன்று கிடைத்தது.

இதையடுத்து, அவர் அடுத்த வார முற்பகுதியில் புதுடில்லி சென்று இந்தியத்

தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவரது செயலாளர் பி.திஸநாயக்கா தெரிவித்துள்ளார்.

இதனால், சந்திரிகா குமாரதுங்க, இலங்கை வருவதற்கு முன்னர் புதுடில்லி சென்றுவிட்டே அங்கிருந்து கொழும்பு திரும்புவாரெனவும் திஸநாயக்கா தெரிவித்தார்.

இலங்கை அரசின் முக்கிய தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட முக்கிய தலைவர்களைச் சந்தித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே, சந்திரிகா குமாரதுங்க இலங்கை திரும்புவதற்கு முன்னர் இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

இது இலங்கை அரசியலிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.