[புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007]
தமிழர் தாயகத்தில் நடைமுறை அரசு நடைமுறையில் உள்ள போதும் தமிழர் தாயகத்தில் ஆட்சேர்ப்புக்கான அகவை 17 ஆக வரையறை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் கூடிய விடுதலைப் புலிகளின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஐ.நா பாதுகாப்பு சபையின் அலன் ரொக் சமர்ப்பித்த அறிக்கையை ஆராயந்துள்ளனர்.
இன்றைய கூட்டத்தின் முடிவில் வயது குறைந்த இளையோர் ஆட்சேர்ப்புக்களை நிறுத்துவதற்கும் இயக்க கட்டமைப்பில் அகவை குறைந்தோரை வெளியேற்ற அனுமதிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அலன் ரொக்கிடம் வழங்கப்பட்ட உறுதியை நிலைநாட்டவும் இணக்கம் காணப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள 17 அகவையை மாற்றியமைப்பதில்லை என்ற நிலைப்பாட்டை தக்க வைப்பது என இன்றை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் விடுதலைப் புலிகள் ஆட்சேர்ப்புக்கான அகவை எல்லையாக 18 அகவையாக வரையறை செய்யும் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான அனைத்துலக சாசனத்தில் தெரிவு நிலை விதிமுறையின் நான்காவது சரத்து தமது விடுதலை இயக்கதத்திற்கு பொருத்தமற்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
முழுஅளவிலான குடியியல் செயற்பாடுகளை நடைமுறை நிழல் அரசாக எமது விடுதலை அமைப்பு செயற்பட்டு வரும் வகையில் தெரிவு நிலையின் நான்காவது சரத்தின் கீழ் ஆயுதக் குழுவாக தமது இயக்கத்தை வரையறை செய்யமுடியாது எனவும் விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசுகளுக்குரிய ஆட்சேர்ப்பு எல்லையாக 18 அகவை வரையறை செய்யப்படும் சமநிலை ஏற்படும் பட்சத்ததில் அதற்கமைய நடந்துகொள்ள தமது விடுதலை அமைப்பு தாயராக உள்ளது எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Wednesday, February 14, 2007
ஆட்சேர்ப்புக்கான வயது 17ஆக விடுதலைப் புலிகள் வரையறை செய்துள்ளனர்.
Wednesday, February 14, 2007





