Sunday, February 04, 2007

சிறீலங்கா அரசபடைகள் அகோர எறிகணைவீச்சு.!!!

[ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007]


தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட யாழ் குடாநாட்டின் தென்முனைப் பகுதிகளை நோக்கி, கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களை சிறீலங்கா படைகள் நிகழ்த்தியுள்ளன.

இன்று காலை 7:30 மணி முதல் வடபோர்முனை பின்தளங்களில் இருந்து, இயக்கச்சி, பளை, வடமராட்சி கிழக்கு, ஆகிய பகுதிகளை நோக்கி சிறீலங்கா படைகளால் ஆட்லறி எறிகணைகள் ஏவப்பட்டன.

இதனிடையே இன்று காலை 9:00 மணியளவில், வரணி பிரிகேட் தலைமையகத்தில் இருந்து சிறீலங்கா படைகளால் ஏவப்பட்ட ஆட்லறி எறிகணைகளுக்கு இலக்காகி, கொடிகாமத்தில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 2:30 மணி தொடக்கம், மீளவும் யாழ் குடாநாட்டின் தென்முனைப் பகுதிகளை நோக்கி, சிறீலங்கா படைகளால் ஆட்லறி எறிகணை தாக்குதல்களும் பல்குழல் உந்துகணை வீச்சுக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.