Thursday, February 01, 2007

சிறீலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்ட 7 இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள்

வியாழன் 01-02-2007 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிறீலங்கா படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் கைதுசெய்யப்பட்ட ஏழு தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக மனிதஉரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் வடமராச்சி பகுதியிலும் மூன்று இளைஞர்கள் கடந்த செவ்வாய் கிழமையுமும் ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் யாழ்பாணத்தின் பிறபகுதியிலும் கைதுசெய்யப்பட்டு காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 1. 17 அகவையுடைய பாடசாலை மாணவன் பாலசுப்பிரமணியம் மதனசீலன் - வல்வெட்டித்துறை சமரபாகு பகுதியல் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்ட பின்காணவில்லை என குடும்ப உறுப்பினர்களால் முறையிடப்பட்டுள்ளது. 2. 23 அகவையுடைய வல்வெட்டித்துறை கம்பர்மலையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவியால் மகித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 3. கரவெட்டி நெல்லியடியை மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்த இளம் விவசாயி nஐயகுமரன் மயூரனை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒருமணியளவில் இராணுவ வாகனத்தில் வந்தவர்களால் கைதுசெய்யப்பட்டு நெல்லியடி இராணுவ முகாமில் வைத்து விசாரித்தபோதும் அவர்கள் அவரை கைதுசெய்யவில்லை எனமறுப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். 4. கோண்டாவில் பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளை வாகனத்தில் சென்றவர்களால் 34 அகவையுடைய ராஐமனோகரன் சுதாகரன் என்பவரை கடந்த செவ்வாய் கிழமை புகையிரத நிலையவீதியில் வைத்து பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள். 5. கொக்குவில் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை தாவடி அம்மன் கோவில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 24 அகவையுடைய ராமசந்திரன் ரஐவன் என்பவரை சிறீலங்கா இராணுவத்தினர் கைது செய்து காணாமல் போயுள்ளார். 6. கொக்குவில் அந்து வேம்படி பகுதி தாவடியை சேர்ந்த செல்லையா கNஐந்திரன் சிறீலங்கா இராணுவத்தால் கைதுசெய்தபின் கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார். 7. ஆனைக்கோட்டை 3ம் மைல்கல் பகுதியில் 24 அகவையுடைய தினேஸ் ஆனந்தன் என்பவர் கடந்த திங்கட் கிழமை சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்தபின் காணாமல் போயுள்ளார் இதேவேளை தம்பிராசா தமையந்தன் என்பவரை பாடசாலைவீதி ஆனைக்கோட்டையில் கடந்த புதன்கிழமை சிறீலங்கா இராணுவத்தால் கைதுசெய்துள்ளதாகவும் அவரையும் காணவில்லை எனவும் மேலும் அறியமுடிகிறது.அநேகமான சந்தர்பங்களில் சாட்சியங்களின் கருத்தின்படி சிறீலங்கா இராணுவம் கைதுசெய்துள்ளதாக அறிகிறபோதும் இவை இராணுவத்தால் மறுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.