Thursday, February 15, 2007

வாகரைக்கு 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை மாற்ற நடவடிக்கை.

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007]

சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்த மட்டக்களப்பு வாகரைக்கு 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை மாற்றுவதற்கு படைத்தரப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

வாகரையை ஆக்கிரமித்த படையினர், அப்பகுதியில் நிலைகொள்வதற்கு தேவையான நிலையில் மட்டக்களப்பு நகரில் உள்ள 23-3 ஆம் பிரிக்கேட்டுக்கு படையினர் நகர்த்தப்படுகின்றனர்.

இதன் காரணமாக வாகரையில் 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வாகரையில் ஏ-15 வீதியின் ஓரங்களை மையமாக வைத்து படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பனிச்சங்கேணிப் பாலம் - வெருகல் ஆற்றுக்கடவை ஆகிய இடங்களில் பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.