Monday, January 15, 2007

ஸ்ரீலங்கா கடற்படை எந்த நேரமும் தாக்கப்படலாம்

ஸ்ரீலங்கா கடற்படை எந்த நேரமும் தாக்கப்படலாம் - கடற்படைத் தலைமை எச்சரிக்கை. Monday, 15 January 2007 ஸ்ரீலங்கா கடற்படை எந்த நேரமும் தாக்கப்படலாம் என்று ஸ்ரீலங்கா கடற்படைத் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாக வைத்து ஸ்ரீலங்காவின் கடற்படைத் தலைமை இந்த எச்சரிக்கையை சகல கடற்படை முகாம்கள் தளங்கள் போன்றனவற்றிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஸ்ரீலங்கா கடற்படையின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இரகசிய இடம் ஒன்றில் பயிற்சி பெற்றுவந்த கடற்புபுலிகளின் விஷேட அணி ஒன்று பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளதாகத் தமக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கடற்படையின் படகுகள் தளங்கள் முகாம்கள் தொடரணிகள் என்பன எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய அபாயம் இருப்பதாகவும்...... எதிர்வரும் நாட்களில் கடற்படையின் அனைத்து தரப்பினரும் அதி உச்ச விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்காவின் கடற்படைத் தலைமை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.