Sunday, January 14, 2007

வாகரையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் தாக்குதல்

வாகரையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் தாக்குதல் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, கதிரவெளி, மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான் படையினரின் கிபீர் விமானங்கள் இன்று ஆறு தடவைகள் தாக்குதலை நடத்தியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாகரை, கதிரவெளி வான்பரப்பில் சிறிலங்கா வான் படையினரின் வேவு விமானம் வட்டமிட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை கதிரவெளி மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து கிபீர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் கதிரவெளி மக்களின் குடியிருப்புக்கள் முற்று முழுதாக சேதடைந்துள்ளன. கிபீர் விமானங்களின் தாக்குதலால் மக்கள் அச்சமடைந்து அல்லலுற்றனர். தொடர்ந்து வேவு விமானம் வானில் பறப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.