Sunday, January 14, 2007

கருணா குழுவினரின் நடவடிக்கையால் காத்தான்குடி...

கருணா குழுவினரின் நடவடிக்கையால் காத்தான்குடி ஆரையம்பதியில் முறுகல் காத்தான்குடி ஆரையம்பதி ஐந்தாம் கட்டையில் நேற்றுக் காலை ஏற்பட்ட முறுகல் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பிரிவினரக்கும் இடையிலான மோதல் ஒன்றின் போது கருணா அணியினர் முஸ்லிம் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயொகம் செய்துள்ளனர் அத்துடன் ஈருருளிகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தியதாக மட்டக்களப்பு சிரேஸ்ட காவல்துறை அதிகாரி மெக்சி புரக்டர் தெரிவித்தார் இதனையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் எனினும் காத்தான்குடி நகரில் வியாபார தளங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. பிரதேசத்தில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.