Saturday, January 13, 2007

சமாதானப் பேச்சு இனி கானல்நீர் இப்படிக் கருதுகின்றதாம்.....

சமாதானப் பேச்சு இனி கானல்நீர் இப்படிக் கருதுகின்றதாம் இந்தியா கொழும்புப் பயண முடிவில் பிரணாப் முகர்ஜி [Saturday January 13 2007] [uthayan.com] இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் அண்மைக் காலத்தில் நடைபெறு வதற்கான வாய்ப்புகளே இல்லை. இத்தகைய அவதானிப்புடன்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொழும்புக்கான தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு புது டில்லி திரும்பியிருக்கின்றார். புதுடில்லி செய்தி வட்டாரங்கள் இவ்வாறு தகவல் வெளியிட்டிருக்கின்றன. இலங்கையில் அமைதிப் பேச்சுகள் என்பது கானல்நீர்தான் என்ற கருத்துக்கு இந்தியா வந்திருப்பதாகவும் அந்த வட்டா ரங்கள் தெரிவித்தன. கொழும்பு சென்றிருந்த அமைச்சர் பிர ணாப் முகர்ஜி அங்கு ஜனாதி பதி மஹிந்த ராஜபாக்ஷவைத் தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தார். இலங்கையின் இனப்பிரச் சினைத் தீர்வுக்கான யோசனைகளை சிபார்சு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண உட்பட இலங்கையின் மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்களைச் சந்தித்த பின்னர் பிரணாப் முகர்ஜி கடந்த புதனன்று நாடு திரும்பியிருந்தார். இலங்கை யுத்த பூமியில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் அப்பாவிப் பொது மக்கள் படுகொலையாவது மற்றும் பாதிக் கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக இந்தியாவின் ஆழ்ந்த கவலையையும் அவ்விடயத்தில் இந்தியாவின் சிரத்தையை யும் அமைச்சர் முகர்ஜி நேரடியாக இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இராணுவ மோதல் நிலைமையைத் தீவிரப்படுத்தும் பாதையில் இலங்கை போய்க்கொண்டிருப்பது கவலைக்குரியது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத் துக்கு இராணுவத் தீர்வு வழியே அல்ல. அது சாத்தியப்படாது. என்று அமெரிக்க மற் றும் இருபத்தியைந்து ஐரோப்பிய நாடு களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பைத் தற்போது ஏற் றிருக்கும் ஜேர்மனி ஆகியவற்றைப் போல இந்தியாவும் இலங்கை அரசுத் தலைவருக்கு வற்புறுத்தி எடுத்துரைத்திருக்கின்றது. புதுடில்லியின் இந்த நிலைப்பாடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது கொழும்பு விஜயத்தின்போது முக்கியமாக இலங்கை அரசுத் தலைவருக்கு எடுத்துரைத் தார் என அதிகார மட்டங்களை மேற்கோள் காட்டி புதுடில்லி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. அதிக அதிகாரப் பரவலாக்கலுடனான தீர்வுத் திட்டம் ஒன்றை விரைந்து முன் வைக்க கொழும்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தையும் முகர்ஜி நேரடியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் எடுத்துரைத்தார். தமது பிரதேசங்களில் நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி யாக தெற்கில் சிவிலியன் கள் மீது பதில் தாக்குதலை நடத்தும் புலிகளின் செயற் பாடு தொடருமானால் பழிக்குப் பழி வாங் கும் குரோ தமே வளரும் என்பதையும் இலங்கைத் தலைவருக்கு இந்திய அமைச் சர் எடுத்து விளக்கினார் என்றும் கூறப் பட் டது.