ஈச்சிலம்பற்று, வெருகல் நோக்கிய முன்னகர்வு முறியடிப்பு கல்லாறு மற்றும் மகிந்தபுர படைமுகாம்களிலிருந்து பலத்த ஆட்லறி ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடத்தியவாறு டாங்கிகள் சகிதம் படையினர் ஈச்சிலம்பற்று மற்றும் வெருகல் பகுதியை நோக்கி முன்னேறிய போதே இந்தக் கடும் சமர் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காலை 8 மணியளவில் ஆரம்பமான இந்தச் சமர் நண்பகல் 12 மணி வரை மிகக் கடுமையாக நடைபெற்றுள்ளது. முன்னேற முயன்ற படையினர் மீது புலிகளும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலைத் தொடுக்கவே நண்பகல் 12 மணியுடன் படையினர் தங்கள் முயற்சியை கைவிட்டு பின் நகர்ந்து பழைய இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





