Friday, January 19, 2007

மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவினர் மீது தாக்குதல்:

மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவினர் மீது தாக்குதல்: 2 பேர் பலி- 2 பேர் உயிருடன் பிடிப்பு [வெள்ளிக்கிழமை, 19 சனவரி 2007] மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். குடும்பிமலை கோட்டத்திற்கு உட்பட்ட திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திகிலிவெட்டை ஆற்றுப்பகுதியினூடாக இரு படகுகளில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த நால்வர் நுழைய முற்பட்டனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குலின் போதே இருவர் கொல்லப்பட்டும் இருவர் உயிருடனும் பிடிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் ஆற்றில் வீழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.