வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் இன்று காலை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரை நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன. மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என பொதுமக்களின் இலக்குகள் மீது மூர்க்கமான எறிகணை வீச்சுக்களை நடத்தியவாறு படைநகர்வை மேற்கொண்டுள்ளன.
படையினரின் எறிகணை வீச்சுக்களால் வாகரைப் பிரசேத்திலிருந்து 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெருமளவு மக்கள் வாளைச்சேனை நோக்கி செல்வதாக அறியமுடிகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத வாகரைப் பகுதியை தற்பொழுது சிறீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகரைப் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளனர். பனிச்சங்கேணி பாலத்தினூடாக நகர்ந்த படையினர் தற்பொழுது வாகரை மருத்துமனை உட்பட ஏனைய பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அப்பகுதியில் நிலக்கண்ணிகளை அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளியாவில்லை. இன்றைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Friday, January 19, 2007
வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.
Friday, January 19, 2007





