Friday, January 19, 2007

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட மாட்டாது:

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட மாட்டாது: ஜேர்மன் தூதுவர் [வெள்ளிக்கிழமை, 19 சனவரி 2007] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஜேர்மனி நீக்காது என்று சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவரிடம் ஜேர்கன் வீத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் பௌத்த துறவிகளைக்கொண்ட அரசியல் கட்சியான ஜாதிக கெல உறுமயவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே வீத் இவ்வாறு தெரிவித்தார். கெல உறுமயவின் அணிக்கு அதன் நாடாளுமன்றத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமை தாங்கினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் பிரகாரம் விடுதலைப் புலிகள் மீதான தடை, ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து எடுத்த முடிவாகும். அந்த முடிவை தனி ஒரு நாட்டினால் மாற்ற முடியாது. ஊடகங்கள் தெரிவித்தது போன்று ஜேர்மன் சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தவில்லை. வடக்கு-கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ள இருந்த 14 பாடசாலைகளின் புனர்நிர்மான வேலைகள் தான் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது இடம்பெற்று வரும் போரினால் அந்த பகுதிகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்லமுடியாததே இதற்கு காரணம். இது தொடர்பாக நாம் ஒர் செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தோம். ஆனால் அது சரியான முறையில் மக்களை சென்று அடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.