Thursday, January 18, 2007

கொழும்பு மோதரை எலி ஹவுஸ் லேனில் ஆட்டோ சாரதி....

கொழும்பு மோதரை எலி ஹவுஸ் லேனில் ஆட்டோ சாரதி சுட்டுகொலை கொழும்பு மோதரை எலி ஹவுஸ் லேனில் இன்று வியாழக்கிழமை காலை 7:55 மணியளவில் ஆட்டோ சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ சாரதியின் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது. குறித்த ஆட்டோ சாரதி இனங்காணப்படவில்லை. பொலிஸார் சம்பவ ஸ்தலத்திற்கு விரந்து விசரணைகளை மேற்கொள்கின்றனர்.. சில தினங்களிற்கு முன்னர் வர்த்தச்கரொருவர் இவ் ஒழுங்கையில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.. குறித்த பகுதியில் கடந்த சில தினங்களாக ஆட்கடத்தல்,கொலைகள் இடம்பெற்றுவருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்..