Thursday, January 18, 2007

வவுனியாவில் குழுமோதலில் சிங்களவர் பலி, தமிழர்கள்...

வவுனியாவில் குழுமோதலில் சிங்களவர் பலி, தமிழர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தல் வவுனியா நகரத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தூரம் தெற்காக அமைந்தள்ள மதவடிக்குளம் பகுதிவாழ் தமிழ்மக்களை இன்று வியாழக்கிழமை காலை சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட குழுமோதலில் சிங்களவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அவ்இடத்தை விட்டு விரட்டுவோம் என பயமுறுத்தியுள்ளார்கள். இக்கொலையானது முன்னர் 6 பொதுமக்கள் கடந்த செவ்வாய் கிழமை மதவடிக்குளம், மற்றும் மூன்றுமுறிப்பு பகுதியில் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட சிங்களவர் பி.எம். நிசங்க என இனம் காணப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் அண்மைகாலமாக இடம்பெற்று வரும் தாக்குதல்கள் ,கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் கொலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர்,சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் நேற்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைள் அதிகரிக்கப்பட்டாலும் ,அதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.