மகிந்தவின் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாந்த முஸ்லிம் காங்கிரஸ்
ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், நிபந்தனையின் அடிப்படையில் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்வது என முடிவெடுத்திருந்தனர்.
பின்னர் இந்த முடிவை மாற்றி, ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அரசில் இணைவதாக இணக்கம் காணப்பட்டது.
இதன் அடிப்படையில், முஸ்லிம் காங்கிரசால் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், அரச தரப்பிடம் கையளிக்கப்பட்டது. இவர்களைச் சந்தித்த இரு அமைச்சர்களான விஸ்வ வர்ணபால மற்றும் ஜனக பண்டார தென்னக்கோன் ஆகியோரிடம் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இருப்பினும், உடனடியாக பதில் வரும் என்று காத்திருந்த முஸ்லிம் காங்கிரசினருக்கு இதுவரை பதில் எதுவும் கூறப்படவில்லை.
ஆளும் கட்சியில் சேர விரும்புபவர்கள் முன்வைக்கின்ற அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களைக் கட்சியில் சேருவதற்கு அழைக்குமாறு, பசில் ராஜபக்சவிடம் மகிந்த தெரிவித்து விட்டதாக, கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடும் அவசியமில்லை, எந்த நிபந்தனையாக இருந்தாலும் அதற்கு சரி என்று சொல்லுங்கள், பின்னர் பார்க்கலாம் என்று மகிந்த கூறிவிட்டார்.
இப்படி கைச்சாத்திட்ட உறுதிப்பாடு இல்லாமல், அரசில் சேருவது குறித்து தற்போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும் பட்சத்தில், ஒப்பந்தத்தைக் கைவிட்டு அரசில் சேர ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவு எடுத்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Thursday, January 18, 2007
மகிந்தவின் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாந்த முஸ்லிம் ...
Thursday, January 18, 2007





