Wednesday, January 17, 2007

மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடையும் மக்கள் தொகை...

மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடையும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆயுததாரிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் 2 வயோதிபர்கள் உட்பட மூவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்களில் உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளார். அடைக்கலம் புகுந்துள்ள வயோதிப பெண் முன்னர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் உயிர்தப்பியிருந்தார்.இந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை தனது கணவர் தாக்கப்பட்டு தனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக இதுவரை 38 பேர் யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் அடைக்கலம் புகுந்தள்ளதாக கூறுப்படுகிறது.இவர்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட 36 இளைஞர்கள் பாதுகாப்பு கருதி யாழ் சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.